தமிழ்நாட்டின் வரலாற்றிலே முதல்முறையாக..மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிக்கும் பெண் போலீசார்.. சிங்கப்பெண்களின் அடுத்த பாய்ச்சல்..!

x

வீட்டை, நாட்டை ஏன் உலகையும் பெண்கள் ஆண்டு வரும் நிலையில், காவல்துறையில் மோப்ப நாய் பயிற்சியாளர்களாக தேர்வாகி உள்ளனர் கவிப்பிரியா, பவானி எனும் பெண் போலீசார்...

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய கவிப்பிரியா, பவானி ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இருவரும் வில்மா என்ற லேப்ரடார் வகை நாய், பெல்ஜியம் மெலானாய்டு நாய் உள்ளிட்ட மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். நாய்கள் மீதான பாசத்தினால், இந்த பணியை தேர்வு செய்ததாக கூறுகிறார் கவிப்ரியா.

கவிப்ரியா, பயிற்சியாளர், மோப்ப நாய் பிரிவு

தமிழக காவல்துறையில் மோப்ப நாய் பிரிவில், ஆர்வம் கொண்டே பணியாற்றி வருவதாக கூறுகிறார் பவானி.

பவானி, பயிற்சியாளர், மோப்ப நாய் பிரிவு

மோப்ப நாய் பிரிவில் நியமிக்கப்பட்ட பெண் போலீசார் எவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள் என்பதை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஓட்டுனர்கள் உள்பட அனைத்து காவல் துறைகளிலும் பெண் போலீசார் நியமிக்கப்பட்டு வருவதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, அதனை கவுரவிக்கும் விதமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்