நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக... - களமிறக்கப்பட்ட புதிய படை...
நீலகிரி மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க முதன்முறையாக, சிறப்பு நக்சல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கேரள மாநில எல்லையை ஒட்டிய வயநாடு, மலப்புரம் மாவட்ட வனப்பகுதிகளில் நக்சல் நடமாட்டம் உள்ளது. இவர்கள், நீலகிரியில், நுழைவதை தடுக்கவும், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள், நீலகிரி வழியாக செல்வதை தடுக்கவும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டு நீலகிரியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரியில் தற்போது 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் 36 போலீசார் அடங்கிய ஒமேகா-3 என்ற பெயரில் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதலாக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அணியினர் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக நீலகிரி மாவட்ட எல்லையில் 16 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.