வரலாற்றில் முதல் முறை..!சிம்பன்சியை கூட விட்டு வைக்காத கும்பல்..போன் பண்ணி பேரம்..அதிர்ச்சி சம்பவம்

x

சிம்பன்சியை கடத்த வேண்டும் என்பது கடத்தல்காரர்களின் நோக்கம் இல்லையாம்..! சரணாயலத்தின் உரிமையாளரது குழந்தைகளை கடத்த வேண்டும் என்பது தான் அவர்களின் டார்க்கெட்..! ஆனா வச்ச குறி தப்பவே... எங்களுக்கு வேறு வழி தெரியல ஆத்தா என... கூண்டுக்குள்ள சிவனே என்றிருந்த சிம்பன்சி குட்டிகளை தூக்கிட்டு போயிருக்கு இந்த கடத்தல் கும்பல்.

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான காங்கோவில் உள்ள கடங்கா விலங்குகள் சரணாலத்தில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி இந்த கடத்தல் நடத்துள்ளது. சிம்பன்சியை கூட்டிட்டு போன கையோட... உரிமையாளருக்கு போன் பண்ணி பேரம் பேசிருக்காங்க கடத்தல்காரர்கள்...

( மணிவண்ணம் - என்னடா விச்சா... 40,000க்கு கூட நீ wORTH இல்லையா... சரி 40,000 வேண்டாம் 4,000ம் கேளு... உள்ளதை அள்ளிதா படம் கவுண்டமணி காமெடி... )

அவர்கள் கேட்ட லட்சங்கள் தங்களிடம் இல்லை என்பது மறுபுறம் இருந்தாலும்... தங்கள் பகுதியில் மட்டும் 23 சரணாலயங்கள் இருப்பதால்... கடத்தல்காரர்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் இதே போல் அந்த பகுதியில் விலங்குகள் கடத்தப்படுவது தொடரக்கூடும் என நினைத்து தயக்கம் காட்டியுள்ளார், சரணாயலத்தின் உரிமையாளர், ஃபிராங் சாண்டேரோ.

பணம் கொடுக்காவிட்டால் சிம்பன்சிக்கு போதை பொருள் கொடுத்து சித்தரவதை பண்ணுவோம்னு சொல்லி மிரட்டிய அந்த இரக்கமற்ற கடத்தல் கும்பல், சிம்பன்சியை வைத்து என்ன செய்கிறார்கள்? என்பது தற்போது வரை தெரியவில்லை.

ஆம்... கடத்தப்பட்டு இரண்டு வாரங்கள் கடத்துவிட்ட நிலையில், சிம்பன்சி குட்டிகள் உயிரோடு தான் இருக்கின்றனவா என்பது கூட தங்களுக்கு தெரியவில்லை என கண்ணீருடன்... காங்கோ அரசின் சட்ட ரீதியான நடவடிக்கையை நம்பி காத்திருக்கிறார், சிம்பன்சியின் உரிமையாளார்.


Next Story

மேலும் செய்திகள்