"10 வருடம் கருணாநிதிக்கு என் ஜாதியே தெரியாது" - அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

x

முதல்வர் ஸ்டாலினை தோளில் தூக்கி சுமப்பதில் தனக்கு எந்த வெட்கமும் இல்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பகுதியில், திமுகவின் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு, அமைச்சர் துரைமுருகன் தங்களுக்கு பேராசிரியர் எனவும், அவர் கூறுவதை தாங்கள் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் 1971 வரை கருணாநிதிக்கு நான் என்ன சாதி என தெரியாது என கூறிய துரைமுருகன், அவரது மகனை தோளில் தூக்கி சுமப்பதில் தனக்கு வெட்கமில்லை எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்