கால்பந்து உலகக்கோப்பை தொடர்... காலிறுதியில் பிரேசிலை காலி செய்தது குரோஷியா

கால்பந்து உலகக்கோப்பை தொடரின் பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவிடம் தோல்வி அடைந்து பிரேசில் வெளியேறியது.
x

கத்தார் எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரத்தில் ஆட்டம் நடைபெற்ற நிலையில், 105வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் அற்புதமாக கோல் அடித்து, பிரேசிலை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து 117வது நிமிடத்தில் குரோஷியா வீரர் பெட்கோவிக், பதில் கோல் அடித்ததால் 120 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் சமன் ஆனது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க, பெனால்டி ஷூட் அவுட் பின்பற்றப்பட்டது. அதில் குரோஷியா 4 கோல்கள் அடிக்க, பிரேசில் 2 கோல்கள் மட்டுமே அடித்தது. இதனால், 4க்கு 2 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி குரோஷியா அரையிறுதிக்கு முன்னேறியது. நம்பர் ஒன் அணியான பிரேசில் காலிறுதியுடன் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்