கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு... தலைமறைவான மருத்துவர்கள்
சென்னையில், தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கணை உயிரிழந்த விவகாரத்தில், விசாரணைக்கு ஆஜராக மருத்துவர்கள் இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில் மருத்துவர்கள் 2 பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
பின்னர் அவர்களின் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். போலீசார் அளித்த சம்மனை, அவர்களது உறவினர்கள் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால், அவர்கள் இருவரையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக கொளத்தூர் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மருத்துவர்களை தேடும் பணியும் நடந்து வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
Next Story