சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டன | Airlplanes | ChennaiRain

சென்னையில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்த‌தால், 13 விமானங்கள் புறப்படவும், 12 விமானங்கள் தரையிறங்கவும் தாமத‌மானதால் பயணிகள் அவதியடைந்தனர்.
x

சென்னையில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்த‌தால், 13 விமானங்கள் புறப்படவும், 12 விமானங்கள் தரையிறங்கவும் தாமத‌மானதால் பயணிகள் அவதியடைந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு 10 மணியில் இருந்து, பலத்த காற்றுன் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்த‌து. இதனால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பலத்த மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னையில் இருந்து டெல்லி, புனே, மலேசியா, சிங்கப்பூர், பாங்காக், கொழும்பு செல்ல இருந்த 13 விமானங்கள் புறப்பட்டு செல்ல வில்லை. வானிலை சீரானதும் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் மலேசியா, ஐதராபாத், டெல்லி, பாங்காக்கில் இருந்து சென்னை வந்த 12 விமானங்கள் ஒரு மணி நேரமாக, வானத்தில் வட்டமிட்டு, வானிலை சீரானதும் தரையிறக்கப்பட்டன. அதே நேரத்தில், ஜெர்மனி பிராங்போர்ட்டில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாததால் ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்