மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து...நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களின் பரபரப்பு காட்சிகள்
திருவனந்தபுரம் அருகே, கடலில் படகு கவிந்த விபத்தில் சிக்கிய இரு மீனவர்கள் நீந்தி கரையேறியதால் உயிர் தப்பினர். கேரள மாநிலம் முதலப்பொழி பகுதியில் கடந்த ஒரு மாதமாக பலத்த காற்று வீசி வருகிறது. இப்பகுதியில் ஏற்கனவே இரு முறை படகுகள் கவிழ்ந்ததில், 4 மீனவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அபி மற்றும் மொய்தீன் ஆகிய மீனவர்கள் சென்ற மீன்பிடி படகு கடல் அலையில் சிக்கி கவிழ்ந்தது. இருவரும் கடலில் மூழ்கிய நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின் நீந்தி கரையேறினர்.
Next Story