"பட்டியலுக்குள் மீனவர்களை"...எம்.பி. தம்பிதுரை கோரிக்கை

x

மாநிலங்களவையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் சில சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அப்போது மசோதா தொடர்பாக பேசிய தம்பிதுரை, பல்வேறு மாநிலங்களில் சில சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான கோரிக்கைகள் இருப்பதாக கூறினார். ஒவ்வொரு மாநிலத்திற்கென்று தனித்தனியாக மசோதாவை கொண்டு வந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்க்காமல், பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையை பரிசீலித்து ஒருங்கிணைந்த ஒரே மசோதாவாக கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழகத்தில் மீனவர், படுகர், வால்மீகி, போயர் உள்ளிட்ட சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்