முதல் இரண்டு கட்ட கீழடி அகழாய்வு அறிக்கை - சமர்ப்பித்த அமர்நாத் ராமகிருஷ்ணன்

x

கீழடியில் தொல்லியல் அகழாய்வை மேற்கொண்ட ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை, மத்திய தொல் பொருட்கள் தலைமை இயக்குநரிடம் சமர்ப்பித்துள்ளார்

கடந்த 2014-15 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடியில் இரண்டு கட்டங்களாக அகழாய்வு பணிகளை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு, இந்திய தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தமிழ்நாடு தொல்லியல் துறை மத்திய அரசிடம் உரிய அனுமதியை பெற்று, 8 கட்டங்களாக அகழாய்வு பணிகளை நடத்தியது. இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை சார்பாக ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் இரண்டு கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையானது, டெல்லியில் உள்ள மத்திய தொல்பொருட்கள் தலைமை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்