எவரெஸ்ட் சிகரம் ஏறும் முதல் தமிழ்ப்பெண்... 38 நாள் பயணம்.. 7,150 மீட்டர்- மெய்சிலிர்க்க வைக்கும் பிரத்யேக வீடியோ
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச் செல்வி, 38 நாள் பயணத்தைக் கடந்து 7 ஆயிரத்து 150 மீட்டர் ஏறி சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை அடுத்த ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட இவர், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்டின் உச்சியை அடைய வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்து வந்தது.
அதனை நிறைவேற்றும் விதமாக கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்ற வீரமங்கை முத்தமிழ் செல்வி, 38 நாள்கள் பயணத்தை கடந்து, 7 ஆயிரத்து 150 மீட்டர் தூரம் ஏறி சாதனை படைத்துள்ளார். எவரெஸ்ட்டில் இருந்து தனது அனுபவத்தை வீடியோ எடுத்து தந்தி தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ளார். அந்த பிரத்யேக காட்சிகளைப் பார்க்கலாம்.