துவங்கியது முதல் தனியார் ரயில் சேவை கட்டணம் எவ்வளவு தெரியுமா ...? | Coimbatore
பாரத் கவ்ரவ் திட்டம் மூலம் இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை கோவையில் வருகிற 14ஆம் தேதி தொடங்குகிறது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு பாரத் கவ்ரவ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பிரசித்தி பெற்ற இடங்களுக்கு தனியார் ரயில் சேவை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், பாரத் கவ்ரவ் திட்டம் மூலம், முதல் தனியார் ரயில் சேவை, கோவையில் இருந்து ஷீரடி வரை வருகிற 14ம் தேதி தொடங்க உள்ளது. 5 நாட்கள் பயணமாக இது அமைய உள்ள நிலையில், ரயிலில் பயணம் செய்ய அதிகபட்ச கட்டணமாக 12 ஆயிரத்து 999 ரூபாயும், குறைந்தபட்ச கட்டணமாக 2 ஆயிரத்து 500 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
Next Story