சந்திரனில் தரையிறங்க உள்ள முதல் தனியார் விண்கலம்
இதற்கு முன்பு சந்திரனில், தனியார் நிறுவனங்களின் விண்கலன்கள் எதுவும் தரையிறங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ispace நிறுவனத்தின் ஹக்குடோ என்ற விணகலம் கடந்த டிசம்பரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
இதில் யு.ஏ.இ நாட்டின் ரஷீத் ரோவர் கலம் உள்ளது. கடந்த மாதம் சந்திரனின் சுற்று வட்டப் பாதையை சென்றடைந்த ஹக்குடோ விண் கலம், 100 கிலோ மீட்டர் உயரத்தில் சந்திரனை சுற்றி வருகிறது. இன்று இரவு 10 மணி அளவில் சந்திரனில் தரையிறங்க உள்ளது. 2010இல் தொடங்கப்பட்ட
ispace நிறுவனம், சந்திரனுக்கு வணிக ரீதியான போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விண்கலங்கள் மட்டும் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளன. 2019இல் இஸ்ரேலைச் சேர்ந்த விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய போது, மோதி நொருங்கி அழிந்தது குறிப்பிடத்தக்கது.