தீக்காயம் அடைந்த முதியவர் மருத்துவமனை கட்டையில் படுக்க வைக்கப்பட்டது ஏன்?

x
  • சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால், தீக்காயங்களுடன் வந்த முதியவர் கட்டையில் படுக்க வைக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.
  • தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் தனது வயலில் ஏற்பட்ட தீயை அணைக்கும்போது, தீயில் தவறி விழுந்து தீக்காயம் அடைந்துள்ளார்.
  • இதனையடுத்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர், போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், நான்கு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் அமரும் கட்டையில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.
  • பின்னர் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, அவருக்கு படுக்கை வசதி செய்து தரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்