சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - காரில் பயணித்தவர்கள் நிலை என்ன?
கேரள மாநிலம் இடுக்கி அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. திருவனந்தபுரத்தில் இருந்து வாகமண் பகுதியை நோக்கி கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது, குட்டிக்கானம் பகுதியில் அந்த கார் சென்ற போது, திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வரத் தொடங்கியது.
இதனையடுத்து, காரில் இருந்த 5 பேரும் உடனடியாக கீழே இறங்கினர்.
அடுத்த சில நொடிகளில், கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலின் பேரில், அங்கு வந்த தீயணைப்புத்துறையின் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
Next Story