தமிழக மக்களிடம் ரூ.9,000 கோடி மோசடி..கோட், சூட் போட்டு ஏமாற்றிய அந்த 10 பேர்.

x

அதிக வட்டி தருவதாக கூறி 8900 கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்குகளில், 3 நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட தலைமறைவு குற்றவாளிகளின் பட்டியலை காவல் துறை வெளியிட்டுள்ளது.

சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், எல்.என்.எஸ். இண்டர்நேஷனல் பைனான்ஸ் நிறுவனம், ஹிஜாவு அசோசியேட் நிறுவனம் ஆகியவை அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்றுள்ளன.

எந்தவித முதலீடும் இல்லாமல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்கள், முதலீடு செய்தவர்களின் பணத்தை, அவர்களுக்கே மாத வட்டியாக கொடுத்து ஏமாற்றி வந்துள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அதன் அலுவலகங்களிலும் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த 3 நிறுவனங்களும் சுமார் 8 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட குற்றவாளிகளின் புகைப்படங்களை காவல் துறை வெளியிட்டுள்ளது.

அவர்களைப் பற்றி துப்பு கிடத்தால், பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம் என்று காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்