எஃப்.ஐ.ஹெச் சர்வதேச ஹாக்கி - ஜெர்மனியை பந்தாடிய இந்தியா
- எஃப்.ஐ.ஹெச் சர்வதேச ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் உலக சாம்பியன் ஜெர்மனியை 6க்கு 3 என்ற கோல் கணக்கில் இந்தியா பந்தாடியது. ஒடிசாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர்கள் கோல்மழை பொழிந்தனர்.
- தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் கார்த்தி செல்வம் 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
- அபிஷேக் 2 கோல்கள் அடிக்க, கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கும், ஜுக்ராஜ் சிங்கும் தலா 1 கோல் அடித்தனர்.
- ஆட்ட நேர முடிவில் 6க்கு 3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற இந்தியா, புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.
Next Story