நடுரோட்டில் மது போதையில் கட்டிப்புரண்டு சண்டை - ஊர்க்காவல் படை காவலர் செயலால் பரபரப்பு

x

நெல்லை வண்ணாரப்பேட்டையில் ஊர்க்காவல் படை காவலர் மது போதையில் தனியார் நிறுவன காவலாளியுடன் நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டை போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஊர்க்காவல் படை காவலராக உள்ள பிரம்மநாயகத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன காலவாளி முத்து சரவணன் என்பருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில், இரவு பணி முடித்து வீடு திரும்பி கொண்டு இருந்த பிரம்மநாயகம் ஜவுளி நிறுவனத்தின் முன்பாக நின்று கொண்டு இருந்த முத்து சரவணனை தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்து சரவணன் திருப்பி தாக்கியுள்ளார்.

இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவிவரும் நிலையில், பிரம்ம நாயகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்.





Next Story

மேலும் செய்திகள்