கால்பந்து போட்டியில் குர்திஸ் எதிர்ப்பு முழக்கம் - தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்கியதால் பரபரப்பு
- துருக்கியில் கால்பந்து போட்டியின் போது, சிலர் குர்திஸ் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் மோதல் வெடித்தது.
- பர்ஷாவில் அமெட்ஸ்போர் மற்றும் பர்ஷாபூர் ஆகிய அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.
- இதில், 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பர்ஷாபூர் வெற்றி பெற்ற நிலையில், அமெட்ஸ்போர் வீரர்களுக்கு எதிராக குர்திஸ் எதிர்ப்பு முழக்கங்களை சிலர் எழுப்பி மைதானத்திற்குள் ஓடினர்.
- அதே நேரத்தில், ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களையும் வீசி தாக்கியதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இனவெறி தாக்குதல் என குர்திஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
Next Story