FIFA கால்பந்து உலக தரவரிசைப் பட்டியல்.. இந்திய அணி 99வது இடத்திற்கு முன்னேறி அசத்தல் - சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி சாதனை
FIFA கால்பந்து உலக தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி 99வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்தாட்ட அணி, அண்மையில் நடந்து முடிந்த தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், உலக தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 99வது இடத்திற்கு முன்னேறி அசத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 106வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story