கான்கிரீட்டையும் தின்னும் கொடூர ஆப்பிரிக்க நத்தைகள் - தமிழகத்தில் புகுந்ததா?

x

கோவை மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் கொத்துக் கொத்தாக ஆப்பிரிக்க நத்தைகள் படையெடுத்து வரும் நிலையில், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையின் காரணமாக காரமடை நகராட்சிக்கு உட்பட்ட குந்தா காலனி, அண்ணா நகர், ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கொத்து கொத்தாக ஆப்பிரிக்க நத்தைகள் படையெடுத்து வந்து அங்கும் இங்கும் கூட்டம் கூட்டமாக ஊர்ந்து செல்கின்றன. கோடை மழையினால் 200 முதல் 900 முட்டைகள் இட்டு இனப் பெருக்கம் செய்து வருகின்றன. குறுகிய நேரத்தில் அதிக பரப்பிலான வேளாண் பயிர்கள் மற்றும் இலை, தழைகளையும் உட்கொள்கின்றன. சுண்ணாம்புச் சத்துக்காக கான்கிரீட்டில் உள்ள சில பகுதிகளையும் உண்டு செரிக்கும் திறனானது இந்த நத்தைகளிடம் உண்டு. இந்த ஆப்பிரிக்க நத்தைகள் கேரளாவில் இருந்து விவசாயிகள் தென்னங் கன்றுகளை வாங்கி வரும் போது அதிலிருந்து வந்திருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். இந்நிலையில், இவ்வகை நத்தைகளை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்