டாப் கியரில் பறக்கும் பெண் டிரைவர்.. வாய் மேல் விரல் வைத்து பார்க்கும் ஊர் - சிங்கப்பெண்ணால் திக்குமுக்காடும் சேலம்
மேட்டூரில் முதன்முறையாக நகர பேருந்து இயக்கி வரும் பெண்ணை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
ஓமலூரை அடுத்த தின்னப்பட்டி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி மேட்டூர் முதல் அம்மாபேட்டை வரை இயக்கப்படும் தனியார் நகர பேருந்தை இயக்கி வருகிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது தந்தையுடன் சேர்ந்து லாரி ஓட்டியுள்ள அவர், இதற்கு முன் தனியார் கல்லூரி பேருந்தையும் இயக்கி வந்துள்ளார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி தற்போது தனியார் நகர பேருந்தை அசத்தலாக ஓட்டிச்செல்கிறார். மேட்டூரில் முதல் முறையாக நகர பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர் தமிழ்ச்செல்வியை சக பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி செல்கின்றனர்.
Next Story