தந்தைக்கு பல்.. மகனுக்கு கை.. தாய்க்கு மூக்கு.. - தர்மபுரியில் வெறிச்செயல்.. குலைநடுங்கும் காட்சி

x

தருமபுரி மாவட்டம், திப்பிரெட்டிபட்டி கிராமத்தில் 5 ஏக்கர் விவசாய நிலத்தை ஊராட்சி மன்ற செயலாளர் அபகரிக்க முயலுவதாக விவசாயி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். விவசாயி குமார் தனது மனைவி மனைவி, மகனுடன் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் 3 பேரையும் கடுமையாக தாக்கி உள்ளது. குமாரின் பல் பிடுங்கப்பட்டும், மகனின் கை உடைக்கபட்டும் மனைவி கடுமையாக தாக்கபட்டும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். ஊராட்சி மன்றச் செயலர் மகாலிங்கம், ஆள் வைத்து தாக்கியதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்