"அது அப்பா தந்த பிறந்தநாள் பரிசு.. பிளீஸ் திருடன் சார் திருப்பி கொடுங்க" - போஸ்டர் அடித்த மாணவன்
கேரளாவில் காணாமல் போன சைக்கிளை திருப்பித் தர முடியுமா ? என்று திருடனுக்கு பள்ளி மாணவன் உருக்கமாக பதாகை எழுதி வைத்துள்ளார்.
கொச்சி கலூர் ஸ்டேடியம் அருகே, கடந்த 23ஆம் தேதி பவல் சமித் என்ற பிளஸ் ஒன் மாணவன் நிறுத்தி வைத்திருந்த சைக்கிள் திருடு போனது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், திருடனுக்கு உருக்கமாக பதாகை எழுதி, சைக்கிள் நிறுத்தும் இடத்தில் அந்த மாணவன் வைத்துள்ளார்.
அதில், தனது அப்பா ஆசை அசையாக பிறந்தநாள் பரிசகா வாங்கித் தந்ததாகவும், அதை எடுத்துச் சென்ற சகோதரர்கள் திருப்பித் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்வதாகவும் எழுதியுள்ளார்.
இந்த படத்தை போலீசார் உட்பட பலர் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், சைக்கிள் இதுவரை கிடைக்கவில்லை என மாணவன் பவல் சமித் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
Next Story