குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தை - உயிருக்கு போராடிய 2 குழந்தைகள்
சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு கவிதா என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், விஜயகுமார் அடிக்கடி மது அருந்திவிட்டு சண்டையிடுவதாக கூறி பிரிந்து சென்ற கவிதா இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதையடுத்து, வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் இரு குழந்தைகளையும் விஜயகுமார் தன்னுடய வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம் என தெரிகிறது. இதே போல் இரு குழந்தைகளையும் அழைத்து வந்த விஜயகுமார், 2 குழந்தைகளுக்கு பாலில் விஷ மாத்திரை கலந்து கொடுத்து விட்டு தானும் குடித்ததாக கூறப்படுகிறது. இதில், இரு குழந்தைகளும் மயக்கமடைந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயகுமாரின் தந்தை 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.