2வது திருமணத்திற்கு தடையாக இருந்த மருமகளை துடிதுடிக்க கொன்ற மாமனார்.. நெல்லையில் வினோத கொலை

x

நெல்லை முத்துமாரி என்ற ராணுவ வீரரின் தந்தை தங்கராஜ், 2வது திருமணம் செய்ய எண்ணியுள்ளார். இதனால் மகனின் பெயரில் எழுதிக் கொடுத்த வீட்டை, தங்கராஜ் மீண்டும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தங்கராஜ் 2வது திருமணம் செய்ய அவரது மகனும், மருமகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், இரும்புக்கம்பியால் மருமகளை பலமாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். பின்பு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருமகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பெண்ணின் உடலை வாங்க மறுத்து, மாமனாரை கைது செய்யுமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்