நெல்லையில் தனி நபர் பயன்பாட்டிற்காக சாலையை தோண்டி குழாய் பதித்தவருக்கும், குழாயை அகற்ற முயன்ற ஊர் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பானது.

x

திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரத்தை சேர்ந்தவர் சேவியர்.

இவரின் விவசாய நிலத்தில் தண்ணீர் வற்றி போய் உள்ளது.

இதனால், தன்னுடைய வீட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து, அருகில் உள்ள தன் விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக சாலையை தோண்டி குழாய் பதித்துள்ளார்.

இதற்கு ஊர் மக்கள் அணைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதையும் மீறி குழாயை பதித்ததால் ஊர்மக்கள் அணைவரும் ஒன்று கூடி குழாயை அகற்றும் பணியில் இறங்கினர்.

ஆத்திரமடைந்த சேவியர் குழாயினை அகற்றுவதை எதிர்த்து ஊர்மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, ஊர்மக்களுக்கும், சேவியருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பானது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர்


Next Story

மேலும் செய்திகள்