கலெக்டராக இருந்தாலும் "விவசாயி மகன்"....ஏர் உழுத மாவட்ட ஆட்சியர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் களப்பணிக்குச் சென்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கலப்பை பிடித்து ஏர் உழுதார். மலை ஊராட்சிகளில் சாலை அமைப்பு தொடர் பாக ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, விவசாயி ஒருவர் நிலத்தில் உழுது கொண்டிருந்தக் கண்ட ஆட்சியர், அவருடன் உரையாடி பின்னர், கலப்பை பிடித்து ஏர் உழுது மகிழ்ந்தார். இதனால், ஆட்சியராக இருந்தாலும், விவசாயிகளின் சிரமங்களை புரிந்து கொண்ட விவசாயியின் மகன் என்று அவரை பாராட்டி வருகிறார்கள்.
Next Story