கிறுக்கல்களையும் கார்ட்டூனாக மாற்றி அழியாப் புகழ் பெற்ற ஆர்.கே.லக்ஷ்மண் மறைந்த தினம்

x

புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணனின் இளைய சகோதரரான ஆர்.கே.லக்ஷ்மண், 1921ல் மைசூரில் பிறந்தார். இளம் வயதிலேயே பார்க்கும் பொருட்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை வரைவதில் ஆர்வம் காட்டிய லக்ஷ்மண், மகாராஜா உயர் நிலை பள்ளியில் பயின்றார். பின்னர் மைசூர் பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

முதலில் கன்னட இதழான குறவஞ்சியில் கேலி சித்திரங்களை வரைந்தார். பின்னர் சென்னை ஜெமினி ஸ்டியோவில் சுமார் ஆறு மாதம் பணிபுரிந்தவர், பின்னர் மும்பைக்கு சென்று பிளிட்சு இதழில் கார்ட்டூனிஸ்ட்டாக சேர்ந்தார்.

1946ல் ஃபீரி பிரஸ் ஜர்னல் இதழில் பணியாற்றிய போது, சிவ சேனா நிறுவனர் பால் தாக்கரேவும் அங்கு கார்டூனிஸ்டாக பணி புரிந்தார். 1947ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் சேர்ந்த லக்ஷ்மண் சுமார் 50 வருடங்கள் அதில் பணியாற்றினார்.

புகழ் பெற்ற, பழம் பெரும் தமிழ் திரைப்பட நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான குமாரி கமலாவை மணந்தார். கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர், கமலா என்ற எழுத்தாளாரை மணந்து கொண்டார்.

அவரின் கார்ட்டூன்களில் காமன் மேன் எனப்படும் சாதாரண மனிதர் ஒருவர் தொடர்ந்து இடம் பெறுவார். காலப் போக்கில் இந்த சாதரண மனிதர் பெரும் புகழ் பெற்று, அவருக்கு மும்பையில் ஒரு சிலை நிறுவப்பட்டது.

நேரு, இந்திரா, லால் பகதூர், மொரார்ஜி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட பல்வேறு பிரதமர்கள், முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் பற்றியும், தேசிய பிரச்சனைகள் பற்றியும் தொடர்ந்து கார்ட்டூனகள் வரைந்து, பெரும் புகழ் பெற்றார்.

பத்ம விபூஷண், ராமன் மேகசசே விருது உள்ளிட்ட பல்வேறு விருதகளை பெற்ற ஆர்.கே.லக்ஷ்மண், 93ஆம் வயதில் உடல் நலக்குறைவு காரணமாக பூனேவில் காலமானார்.

அழியாப் புகழ் பெற்ற கார்ட்டூன்களை 50 வருடங்களாக வரைந்து சாதனை படைத்த, ஆர்.கே.லக்ஷ்மண் மறைந்த தினம், 2015, ஜனவரில் 26.


Next Story

மேலும் செய்திகள்