தீபாவளிக்காக கடற்கரை சென்ற குடும்பம் - மகளுக்கு நேர்ந்த சோகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, கடல் அலையில் சிக்கி சிறுமி மாயமானார்.
துறையூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர், தீபாவளி கொண்டாட்டத்துக்காக குடும்பத்துடன் கடப்பாக்கம் குப்பம் கடற்கரைக்கு சென்றனர்.
கடலில் விளையாடிக் கொண்டிருந்த போது, சங்கரின் 14 வயது மகள் சவிதா ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த சூனாம்பேடு போலீசார், சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story