40 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய குடும்பங்கள் - தென்காசியில் நெகிழ்ச்சி சம்பவம்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 40 ஆண்டுகளுக்குப் பிறகு உறவுகள் ஒன்று கூடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.கீழமரத்தோணி கிராமத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஏராளமான குடும்பங்கள் வசித்து வந்தன.இந்நிலையில், அவர்கள் வறட்சி காரணமாக தங்களின் வாழ்வாதாரத்தை தேடி சென்னை, திருச்சி, கோவை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட இருவர் முயற்சியால், சமூக வலைதளங்கள் மூலம் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று திரட்டப்பட்டன. இவர்கள் அனைவருக்கும், கீழமரத்தோணி கிராமத்தில் ஒன்று கூடுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது அன்பை பறிமாறிக் கொண்டனர். பின்னர், அனைவருக்கும் உணவுகள் பரிமாறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்