திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கள்ளச்சந்தையில் விஐபி தரிசன டிக்கெட்...!
ஆந்திர மேல்சபை உறுப்பினரான ஷேக் சாப்ஜி 6 பக்தர்களுடன் விஐபி பிரேக் டிக்கெட் மூலம் தரிசனத்திற்காக சென்றார். அப்போது, அவர்களது ஆதார் அட்டைகளை ஆய்வு செய்தபோது, அனைத்தும் போலி என தெரிய வந்தது. கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களை, ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது போல் சித்தரித்து ஆதார் அட்டை தயார் செய்து டிக்கெட் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மேல்சபை உறுப்பினரின் டிரைவர் கணக்கில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை, அந்த பக்தர்கள் செலுத்தியிருப்பது தெரிய வந்தது. பக்தர்களிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்த தேவஸ்தான லஞ்ச ஒழிப்புத்துறையினர், திருப்பதி மலையில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சாமி தரிசன டிக்கெட்டை கள்ள சந்தையில் மேல்சபை உறுப்பினரே விற்று சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story