கூகுள் பே-யில் மட்டுமே கிடைக்கும் வசதி..! உங்கள் மொபைலில் இதை செய்தால் போதும் - இந்தியாவில் இதுவே முதன்முறை..!

x

Google payவில் புதிய வசதியாக split money வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் சிறப்புகள் எண்ண ? பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் ஆன்லைன் மூலம் பண பரிவர்தனை செய்கிறார்கள்.இதில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து பண பரிவர்த்தனை செய்ய வசதியாக split money வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வசதி Google pay வில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்ற upi செயலிகளில் இந்த வசதி இல்லை.

இந்த வசதி மூலம் குறிப்பாக வாடகை பணம்,டிவி,மின்சாரம் போன்றவற்றின் பில் கட்டணத்தை பிரித்துக்கொள்ளலாம்.

இதை பயன்படுத்த Google pay அக்கவுண்ட் இருந்தால் போதும்,மேலும் android/iOS என எதில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Split வசதியை பயன்படுத்துவதற்கு முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ios செயலியில் உங்களின் Google pay குழு பக்கத்தை திறக்கவும்.

இதை பார்க்க discover page ஆப்ஷனை கிளிக் செய்யவும்.பிறகு split an expense ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் செலுத்த வேண்டிய பில் கட்டணத்தை உள்ளிடவும்.

பில் கட்டணத்திற்கு தனியாக ஒரு பெயரிட்டு கட்டணத்தில் பங்கு கொள்ளும் நபர்களை தனியாக தேர்வு செய்து,send request ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு அந்தந்த நபர்களுக்கு அவர்கள் செலுத்தவேண்டிய கட்டண தொகை பற்றிய விவரம் சென்றுவிடும்.இந்த பக்கத்தை உருவாக்கியவருக்கே மற்றவர்கள் செலுத்தும் கட்டணம் செல்லும்.

அதன் பிறகு சேகரித்த கட்டணத்தை அவரே பில் கட்டணமாக நேரடியாக செலுத்த வேண்டும்.பில் கட்டணத்தை யார் யாரெல்லாம் செலுத்தினார்கள் என்பதை தெரிந்து கொள்ள bill details ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் எத்தனை பேர் கட்டணத்தை செலுத்தியுள்ளார்கள்,செலுத்தவில்லை என்ற தகவல் கிடைக்கும்.


Next Story

மேலும் செய்திகள்