கடும் உணவுத்தட்டுப்பாட்டை எதிர்நோக்கி இலங்கை மக்கள் - களத்தில் இறங்கும் இந்தியா..!

x

கடும் உணவுத்தட்டுப்பாட்டை எதிர்நோக்கி இலங்கை மக்கள் - களத்தில் இறங்கும் இந்தியா..!

இலங்கைக்கு 44 ஆயிரம் டன் யூரியாவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா பல்வேறு வகையில் உதவி வருகிறது. அந்தவகையில் இலங்கையின் உரத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, அந்தநாட்டிற்கு 44 ஆயிரம் டன் யூரியாவை அனுப்ப மத்திய ரசாயன துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள உரத்தட்டுப்பாடு காரணமாக, கடுமையான உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசின் முடிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்