நேருக்கு நேர்.. வார்த்தைக்கு எதிர் வார்த்தை.. அமைச்சர் செந்தில்பாலாஜி தீர்ப்பில் இரு நீதிபதிகளுக்குள் முரண்பாடு.. இப்படியொரு விஷயம் இருக்கா?

x

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்ததாகக் கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது, இரு நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீர்ப்பை விரிவாக பார்க்கலாம்...

அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்தனர்.

அதன்படி, இந்த வழக்கில் நீதிபதி நிஷா பானு அளித்த தீர்ப்பில்,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட நபரை, 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்க மட்டுமே கோர முடியும் என்றும்,

24 மணி நேரத்திற்கு பிறகு, அமலாக்கத் துறை தனது காவலில் வைத்திருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அதனால், செந்தில்பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்தது சட்டவிரோதமானது...

அதேசமயம் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு எடுத்த நேரத்தில், நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய உத்தரவும் சட்டவிரோதமானது என்பதால், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணக்கு உகந்ததுதான் என குறிப்பிட்டார்.

அமலாக்கப்பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் இல்லை என்பதால்,

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலில் இருப்பதாக கருதக்கூடாது என்கிற அமலாக்கத் துறை தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும்,

செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி நிஷா பானு தனது உத்தரவில் கூறியுள்ளார்.

ஆனால் இந்த வழக்கில் நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்புக்கு மாறாக, நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு அமைந்தது.


Next Story

மேலும் செய்திகள்