கோடையில் பிங்க் நிறத்தில் மாறும் கண்கள்... புதிய நோய்.. எச்சரிக்கும் சென்னை மருத்துவர்
கத்திரி வெயிலுக்கு முன்பாகவே கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் கண் அழற்சி நோய் அதிகரித்துள்ளது.
பொதுவாக கோடை காலத்தில் கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது சவாலாக இருப்பதால், பிரச்சனை ஏற்படுகிறது. இதே போல் இளம் சிவப்பு கண் நோய் (pink eye) என்றும் அறியப்படுகிற கண் அழற்சி பாதிப்புகள் கடந்த இரு வாரங்களாக அதிகரித்துவருவதை கண்டறிய முடிவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கண் அழற்சி வராமல் தடுப்பதற்கு, அழுக்கான கைகளால் கண்களை தொடாமல் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story