கண்களை கவரும் 1 லட்சம் லாந்தர் விளக்குகள்... புத்த கோவிலின் மஹா புச்சா தினம்

x

தாய்லாந்தில் மஹா புச்சா தினத்தை முன்னிட்டு புத்தக் கோவிலில் ஒரு லட்சம் லாந்தர் விளக்குகள் ஏற்றப்பட்டன. பதும் தானி நகரில் உள்ள புத்தக் கோவிலுக்கு ஏராளமான புத்த மதத்தினர், ஊர்வலமாக வந்து லாந்தர் விளக்குகளை ஏற்றினர். பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த புத்தத் துறவிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 1 லட்சம் லாந்தர் விளக்குகளுடன் புத்தக் கோவில் மிளிர்ந்தது, காண்போரைக் கவரும் விதமாக இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்