மேற்கு வங்கத்தில் உச்சகட்ட பதற்றம்... அதிகார வெறிக்காக 3 பேர் சுட்டு கொலை
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், 3 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்காளத்தில் கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு அடுத்த மாதம் 8-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா ஊராட்சி ஒன்றிய தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தபோது, இடதுசாரி -காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த சிலர் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். அங்கு நீடித்து வரும் வன்முறை சம்பவங்களால் மாநிலத்தின் பல பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.