தகாத உறவால் தலைமுடியை இழந்து கதறும் பெண்.. கோவையில் அதிர்ச்சி

x
  • கோவையில், கணவர் தகாத உறவில் இருந்த பெண்ணின் தலைமுடியை வெட்டிய மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • கோவை மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் சிவானந்தம் என்பவர், வெள்ளலூர் பகுதியில் சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
  • அப்போது, ஆறுமுகத்தின் மனைவியான சுமதிக்கும், சிவானந்தத்திற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளைடைவில் தகாத உறவாக மாறியுள்ளது.
  • இந்த விவகாரம் சிவானந்தம் மனைவியான மல்லிகா மற்றும் அவரது 2 பிள்ளைகளுக்கு தெரியவரவே, இருவரையும் கண்டித்துள்ளனர்.
  • இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும், சிவானந்தம் மற்றும் சுமதியை, போலீசார் எச்சரித்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
  • இந்த நிலையில், சுமதி வீட்டிற்கு மீண்டும் சிவானந்தம் சென்றிருப்பதை அறிந்த மனைவி மல்லிகா மற்றும் அவரது பிள்ளைகள், உடனடியாக அங்கு விரைந்து சென்றுள்ளனர்
  • . பின்னர் சுமதியை தாக்கியதுடன், அவரது தலைமுடியையும் வெட்டியுள்ளனர்.
  • இதுதொடர்பான புகாரின் பேரில் மல்லிகா மற்றும் அவரது இரு பிள்ளைகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்