பேக்கரி மாஸ்டரை வளைத்து போட்ட இளம்பெண்.. கும்மிடிப்பூண்டியில் கும்மியெடுத்த மனைவி - பரபரப்பு காட்சிகள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள பெண்கள் அழகு நிலையம் எதிரே நேபாளத்தை சேர்ந்த இளம்பெண்கள் உள்ளிட்ட 5 பெண்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அழகு நிலைய வாசலில் 5 பெண்களும், கடுமையாக வாக்குவாதம் செய்து தாக்கிக் கொண்டனர்.
தலைமுடியை பிடித்துக் கொண்டு ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே வைரலான வீடியோவின் உண்மை நிலவரம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தியதில், சண்டையிட்ட நேபாள பெண்களில் ஒருவருக்கு, அதே பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்துவரும் ஒருவருக்கும் பழக்கம் இருந்ததாகவும் அதனை, அறிந்த மாஸ்டரின் மனைவி, அழகு நிலையத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட பெண்ணை கண்டித்தபோது, கைகலப்பாக மாறியதும் தெரியவந்தது.
மேலும், இது 2 மாதத்திற்கு முன்பு நடத்த சண்டை எனவும், தெரிய வந்துள்ளது.