ட்ராக்டர் முழுவதும் வெடிபொருட்கள்..பெரும் தாக்குதலுக்கு சதித்திட்டம் - சுற்றிவளைத்த போலீசார்..அதிரவைக்கும் பின்னனி
தெலங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தெலங்கானா மாநிலம் கொத்தகூடம் மாவட்ட எஸ்பி வினித்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் போலீசார், சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் குறிப்பிட்ட அடர்ந்த வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. துப்பாக்கி முனையில் 10 மாவோயிஸ்டுகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஏராளமான வெடி பொருட்கள், 500 டெட்டனேட்டர்கள், 300 பண்டல் வயர்கள், 600 வெடி மருந்து குச்சிகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 1 டிராக்டர், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தந்தவாடா வனப்பகுதியில் நடத்தியது போல் அந்த பகுதியில் மாவோயிஸ்டுகள் பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
Next Story