தர்காவுக்கு சொந்தமான நிலங்களை முன்னாள் எம்எல்ஏ குடும்பத்தினர் திருப்பி தராததால் பரபரப்பு

x

அப்துல்லா ஷா தர்காவுக்கு சொந்தமான சுமார் 25 ஆயிரம் ஏக்கர் சதுரஅடி இடத்தை, முன்னாள் எம்எல்ஏவுமான எம்.எம்.எஸ்.அபுல்ஹாசன் குத்தகைக்கு எடுத்து அது முடிந்த பின்னரும், தர்கா இடத்தை காலி செய்யவில்லை. 1961-ஆம் ஆண்டு குத்தகை காலம் முடிந்த பின்னரும், எம்.எம்.எஸ். அப்துல் ஹாசன் இறப்புக்கு பிறகும் அவரது குடும்பத்தினர் தர்காவின் இடத்தை காலி செய்யவில்லை. கடந்த 2011 -ஆம் ஆண்டு இந்த இடம் தர்காவுக்கு சொந்தமானது தான் என்றும் இதனை அபகரிக்கும் நோக்கமில்லை என்றும் அவர் தர்கா நிர்வாகத்தினருக்கு எழுதிக்கொடுத்தார். இந்நிலையில் இந்த தர்காவின் விரிவாக்கப்பணிகளை நடைபெற உள்ளதால்,

நிலத்தை மீட்டுத்தர கோரி, போலீசாரிடம் புகார் அளித்தனர். இரு தரப்பினரையும் போலீசார், அழைத்து பேசிய போது, இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து, போலீஸார் இருதரப்பினரையும் வலுக்கட்டாயமாக காவல் நிலையத்தை விட்டு வெளியேற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்