பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைகிறார் முன்னாள் துணை முதல்வர் லஷ்மண் சவுதி
- கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், வாய்ப்பு கிடைக்காததால் பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
- அந்த வகையில், முன்னாள் துணை முதல்வரும், லிங்காயத்து சமுதாயத்தின் சக்தி வாய்ந்த தலைவர்களுள் ஒருவரான லக்ஷ்மண் சவுதிக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவருக்கு பதிலாக மகேஷ் குமட்டஹல்லிக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
- இதனால் அதிருப்தியடைந்துள்ள லஷ்மண் சவுதி, பா.ஜ.க. அடிப்படை உறுப்பினர் மற்றும் மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
- பெலகாவியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வந்துள்ள அவர், துணை சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.
- பின்னர் கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்திற்கு வருகை தந்து, அக்கட்சியில் இணைகிறார்.
- தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், பாஜகவில் இருந்து விலகும் 4வது நபர் லஷ்மண் சவுதி என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story