EX காதலனின் அதிர்ச்சி ஆடியோ... பயத்தில் காவல் நிலையம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை? நடந்தது என்ன?

x

முன்னாள் காதலன் கொலை மிரட்டல் விடுப்பதாக புகாரளிக்க சென்றபோது, புகாரை வாங்காமல் செல்போனை பறித்து அடித்து துரத்தியதாக, மகளிர் போலீசார் மீது இளம்பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்......

ஆண்களால்தான் பெண்களுக்கு எத்தனை எத்தனை ஆபத்துகள்!

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதியில் தொடங்கி....

ரயிலில் தள்ளி கொல்லப்பட்ட சத்யா வரையில் அதற்கு எத்தனையோ உதாரணங்களைப் பார்த்துவிட்டோம்.

இப்படி எதுவும் தனக்கு நடந்துவிடக் கூடாது என்ற அச்சத்தில்தான் காவல் நிலையப் படியேறியிருக்கிறார் இந்த இளம்பெண். ஆனால், அங்கு அவருக்கு நேர்ந்த அனுபவம் மோசமானதாக இருந்திருக்கிறது.

தனது முன்னாள் காதலரான கிருஷ்ணன் என்பவர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாகவும், தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் இந்த இளம்பெண், கிருஷ்ணன் தன்னை மிரட்டும் ஆடியோவையும் ஆதாரமாக அளித்துள்ளார்.

இளம்பெண் தற்போது வசிப்பது தாம்பரம் எல்லைக்குள்தான். ஆனால், அவர் கிருஷ்ணனை காதலித்த போது முகப்பேரில் தங்கியிருந்தாராம். அதனால், அங்கிருக்கும் காவல் நிலையத்தில் போய் புகார் அளிக்குமாறு கூறி, மகளிர் போலீசார் புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியும், செல்போனை பறித்துக் கொண்டும் போலீசார் அடித்து துரத்தியதாக இளம்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்