சொந்த கிராமத்திற்கு 55 வருடங்கள் பிறகு வந்த அமைச்சர்.. தாரை தப்பட்டை கிழித்து தொங்க விட்ட கட்சியினர்
- கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கூவனூர் கிராமமான தனது சொந்த கிராமத்துக்கு, அமைச்சர் எ.வ.வேலு, 55 வருடங்களுக்கு பிறகு வந்தார்.
- அங்கு நடைபெற்ற முதல்வரின் பிறந்த நாள், விழாவில், சுமார் 40 லட்சம் மதிப்பில் 1,200 ஏழை எளிய மக்களுக்கு மூன்று சக்கர வாகனம்,தையல் மிஷின்,சலவை பெட்டி,சில்வர் ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- முன்னதாக சொந்த கிராமத்திற்கு பல வருடங்கள் கழித்து வந்த அமைச்சரை 500 இரு சக்கர வாகனங்களில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை திமுக நிர்வாகிகள் தாரை தப்பட்டையுடன் மேளதாளம் முழங்க வரவேற்று அழைத்து வந்தனர்.
Next Story