இன்றும் காவு வாங்கும் டைட்டானிக்.. 5 பேரை தேடும் இரு நாடுகள்
அட்லாண்டிக் கடலில் மாயமான நீர்மூழ்கி கப்பலில், இங்கிலாந்தை சேர்ந்த முன்னணி தொழிலதிபர் ஒருவரும் பணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தைப் பார்வையிட, சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கி சொகுசு கப்பலின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பலில், இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங்(Hamish Harding) உள்ளிட்ட 5 சுற்றுலா பயணிகள் பணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, நீர்மூழ்கி கப்பல் மாயமானது மிகவும் ஆழமான கடல் பகுதி என்பதால், கப்பலை தேடும் பணி மிகவும் சவாலானது என தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
Next Story