சீமானை கைதுசெய்ய கோரி போராட்டம்.. கடும் எதிர்ப்பால் பிரசாரத்தின் பாதியிலே கிளம்பிய தொண்டர்கள்
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கைது செய்யக் கோரி, ஈரோட்டில் அருந்ததியர் சமூக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- அருந்ததியர் சமூகத்தினர் குறித்து பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை சீமான் தெரிவித்து இருந்தார்
- . இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து ராஜாஜிபுரம் பகுதியில் அருந்ததியர் சமூக மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, சீமானைக் கைது செய்யக்கோரி கோஷ எழுப்பினர்.
- இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
Next Story