ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு - ஒரே இடத்தில் கூடிய 3 கட்சியினர்.. பதறிப்போன போலீசார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு, சூரம்பட்டி, திருநகர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதேசமயம் அதிமுக பணிமனை முன்பு திமுகவினரும் அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் 3 கட்சியினரும் ஒரேநேரத்தில் சந்திக்கும் நிலை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 3 கட்சியினரையும் வெவ்வேறு பகுதிக்கு பிரித்து அனுப்பினர்.
Next Story