ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... "108 புகார்கள் வந்துள்ளது"-தமிழக தேர்தல் ஆணையம்
- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் இந்திய தேர்தல் ஆணையம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளது.
- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.
- தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாதூ, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு மற்றும் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
- இந்த ஆலோசனையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகள், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
- பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுவதாக அதிமுக, பாஜக,தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சாட்டியுள்ள நிலையில் புகார்கள் தொடர்பாகவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை 108 புகார்கள் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story