"இன்று மாலைக்குள்..." பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும், இன்று மாலைக்குள் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக, முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்துள்ளார் எனவும்,
அவரை தேர்ந்தெடுக்க தங்களுக்கு சம்மதம் எனில் "ஒப்புதல் அளிக்கிறேன்'' என்றும், இல்லையெனில்"மறுக்கிறேன்"என்றும் வாக்குச் சீட்டில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அந்த படிவத்தை இன்று மாலைக்குள், அதிமுக தலைமை அலுவகத்தில் சேர்க்க வேண்டும் எனவும் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, "இரட்டை இலை" சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான படிவம் A & B உள்ளிட்ட விண்ணப்பங்களில், கையொப்பம் இடும் அதிகாரம், கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்பட்டுள்ளது.